1. Home
  2. தமிழ்நாடு

உலக செஸ் சாம்பியனை வீழ்த்திய பிரபல செஸ் வீரர்..!

1

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி தொடரானது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா சார்பில் பல செஸ் வீரர்கள் பங்கேற்றனர். மேலும், உலக செஸ் சாம்பியனான டி குகேஷ் தன்னுடன் போட்டியிட்ட அனைத்து வீரர்களையும் வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் 2025 போட்டி பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வரும் டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் 2025 போட்டியில், உலக செஸ் சாம்பியனான குகேஷ் மற்றும் கிராண்ட்மாஸ்டர் பிரஞ்ஞானந்தாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மேலும், “13-வது போட்டியில் இருவரும் 8.5 புள்ளிகளை பெற்ற சமநிலை வகித்த காரணத்தால் இறுதி போட்டி டை பிரேக்கராக” மாறியது. இந்த “டை பிரேக்கர் சுற்றில் குகேஷை வீழ்த்தி பிரஞ்ஞானந்தா 2025 ஆம் ஆண்டுக்கான டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் தொடரில் வெற்றி பெற்றார். மேலும், பட்டத்தை வென்ற பிறகு, பிரஞ்ஞானந்தா தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்”.

Trending News

Latest News

You May Like