1. Home
  2. தமிழ்நாடு

அமெரிக்காவை பிரபல விண்வெளி வீரர் விமான விபத்தில் பலி..!

1

அமெரிக்காவை சேர்ந்த பிரபல விண்வெளி வீரர் வில்லியம் ஆண்டர்ஸ் (90). இவர் அப்பல்லோ-8 விண்கலத்தில் சென்று நிலவை சுற்றி வந்த மூன்று நபர்களில் ஒருவராவார். அப்பல்லோ-8 விண்கல பயணத்தின் போது எர்த்ரைஸ் புகைப்படத்தை எடுத்தவர். விண்வெளியில் இருந்து பூமியின் முதல் வண்ணப் புகைப்படம் இதுவாகும்.

இந்த நிலையில் வில்லியம் ஆண்டர்ஸ் விமான விபத்தில் பலியானார். அவர் தனக்கு சொந்தமான ஒரு சிறிய ரக விமானத்தை தனியாக இயக்கி கொண்டு வாஷிங்டனில் இருந்து புறப்பட்டார். 

அப்போது வாஷிங்டன் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தீவுகளுக்கு இடையே ஜோன்ஸ் தீவில் உள்ள கடலில் விமானம் விழுந்தது. இந்த விபத்தில் வில்லியம் ஆண்டர்ஸ் உயிரிழந்தார். அவரது உடலை மீட்கும் பணி நடந்து வருகிறது. 

Trending News

Latest News

You May Like