தற்கொலை மனநிலைக்கு சென்ற பிரபல நடிகை! ஏன் தெரியுமா?

கொரோனா காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பணக்கஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு சென்றதாக பிரபல நடிகை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழில் பீமா, ரேணிகுண்டா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கேரளாவை சேர்ந்த நடிகை சனுஷா. தொடர்ந்து நாளை நமதே, எத்தன், நந்தி, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது அதிர்ச்சி அளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கொரோனாவின் ஆரம்ப காலம் தனக்கு மிகவும் கஷ்டத்தை கொடுத்தது என்றும், சொந்த வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் பிரச்னைகள் ஏற்பட்டன என தெரிவித்துள்ளார். அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு பிரச்னைகளை யாருடன் பகிர்ந்து கொள்வது என்று தெரியாமல் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்ததாக கூறியுள்ளார்.
அப்போது மிகவும் பாசம் வைத்துள்ள தனது தம்பியை பற்றி யோசித்ததால் தற்கொலை எண்ணத்தை கைவிட்டதாக அவர் கூறியுள்ளார். அதன்பிறகு மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்ததாக கூறியுள்ள அவர் அதன் பிறகு மனதில் இருந்த குழப்பங்கள் விலக பழைய நிலைக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
அதனால் யாருக்கேனும் மன அழுத்தம் இருந்தால் அவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
newstm.in