அசால்டாக 60 அடி மரத்தில் ஏறிய பிரபல நடிகை! வைரல் வீடியோ!

இந்த ஊரடங்கு காலத்தில் பல திரை நடிகைகள் அரைகுறை ஆடைகளில் போட்டோஷூட் செய்து வெளியிட்டு பரபரப்பு கிளப்பி வருகையில், பிரபல தமிழ் பட நடிகை ஒருவர் சர,சரவென 60 அடி தென்னை மரத்தில் ஏறிய வீடியோ வைரலாகி வருகிறது.
நம் கிராமத்து பெண்களுக்கு தன்னம்பிக்கைத் தரும் விதத்தில் அதிலும் அவர் துப்பட்டாவை கழட்டி தன் காலுக்கு அரணாக்கி ஏறி இறங்குவது வேற லெவல் தன்னம்பிக்கை என்றே சொல்லலாம்.
பொதுவாகவே நடிகைகளைப் பொறுத்தவரை எப்போதுமே வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதைகளாகக் காட்டி பந்தா செய்யும் நிலையில், மிக இயல்பாக தனது குறும்புத்தனத்தையும், அழகுற வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகை சஞ்சனா சிங். விஞ்ஞானி, தனி ஒருவன் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி, குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்தான் சஞ்சனா சிங்.
சஞ்சனாவுக்கு எப்போதுமே உடற்பயிற்சி செய்வதில் கொள்ளைப் பிரியம். ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபோதும் சஞ்சனா, தினமும் ஒரு உடற்பயிற்சி செய்து கருத்துடன் வெளியிட்ட வீடியோ ஏற்கெனவே வைரல் லெவல்.
இந்நிலையில் சஞ்சனா விறுவிறுவென தென்னை மரம் ஏறும் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள்.
newstm.in