பிரபல நடிகரின் சகோதரர் திடீர் மரணம்!
பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தம்பி அனில் தேவ்கன் மரணமடைந்தார்.
திரைப்பட இயக்குநரான அனில் தேவ்கன் தனது அண்ணன் அஜய் தேவ்கனை ராஜு ஜாஜா, பிளாக்மெயில் ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார். ஜான், பியார் டு ஹோனா ஹய் தா, சன் ஆஃப் சர்தார் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிவர்.
இந்நிலையில் 45 வயது நிரம்பிய அனில் தேவ்கன் உயிரிழந்ததாக அவரது அண்ணன் அஜய் தேவ்கன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.அவரது அகால மரணம் தனது குடும்பத்தினரின் இதயத்தை உடையச் செய்துள்ளது என்று அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார்.
அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்றும், கொரோனா தொற்று காரணமாக நாங்கள் இறுதி அஞ்சலி கூட்டத்தை நடத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அனில் தேவ்கனின் மரணத்திற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
newstm.in