பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ள பிரபல நடிகர்!!

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரானவர். அதனால் அவ்வப்போது மத்திய அரசின் குறைகளை விமர்சிப்பார். அந்த வகையில் பிரதமர் மோடி குறித்து பிரகாஷ்ராஜ் முன் வைத்துள்ள விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் டீ விற்றதை நம்பியவர்கள், நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.
அவருடைய இந்த ட்விட்டர் பதிவு வைரலாகியுள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
The ones who believed he sold chai..
— Prakash Raj (@prakashraaj) April 23, 2022
aren’t believing he is selling the nation too .. #justasking
newstm.in