1. Home
  2. தமிழ்நாடு

கேப்டன் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வீட்டிற்கு ஓடோடி வந்த பிரபல நடிகர்..!

1

கேப்டன் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக டிசம்பர் 28ஆம் தேதி காலமானார்.தேமுதிக தலைமை அலுவலகத்திலும், சென்னை தீவுத்திடலிலும் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். டிசம்பர் 29ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், தேமுதிக தலைமை கழகத்திற்கு நேரில் சென்று கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து, சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடனான தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ள சரத்குமார் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘புலன் விசாரணை’ படத்துக்காக மேக்அப் மேன் ராஜூ என்னை விஜயகாந்திடம் அழைத்துச் சென்றார். அப்போது தான் அவரை நான் நேரில் பார்த்தேன். இயக்குநருக்கு உரிய மரியாதையை அவர் கொடுத்ததை நான் நேரில் பார்த்தேன். மிகப்பெரிய படத்தில் ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இயக்குநர் சொன்னபோது, அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. யார் என்ன என்பது குறித்து எதுவும் கேட்காமல் ஒப்புக்கொண்டார். அன்று தொடங்கியது எங்கள் நட்பு.

விஜயகாந்த் எனக்கு தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகொடுத்தார். அவர் தயாரித்த ‘தாய்மொழி’ என்கிற படத்தில் என்னை நடிக்க வைத்து அவர் கவுர வேடத்தில் நடித்தார்.அவருடனான நட்பை எப்போதும் மறக்க முடியாது. நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பொதுச்செயலாளரான எனக்கு மரியாதை கொடுத்து நடத்தினார். அதை என்றும் மறக்க முடியாது. நடிகர் சங்கத்துக்காக கலைநிகழ்ச்சிகளை அவ்வளவு நேர்த்தியாக நடத்திக் காட்டினார். 

Trending News

Latest News

You May Like