டான்ஸ் கற்பதற்காக ரிக்ஷா ஓட்டுநரின் மகனுக்கு ரூ.3 லட்சம் பணம் கொடுத்த பிரபல நடிகர்!

லண்டனில் பாலே டான்ஸ் கற்கவேண்டும் என்ற ரிக்ஷா ஓட்டுநர் மகனின் கனவை 3 லட்சம் நிதியுதவி அளித்து ரித்திக் ரோஷன் நிறைவேற்றியுள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி விகாஸ்புரியை சேர்ந்த ரிக்ஷா ஓட்டுநரின் மகன் கமல் சிங் (20) டான்ஸ் மீது அதீத காதல் கொண்வர். பாலே நடனத்தில் சிறந்து விளங்கும் இவருக்கு உலகின் புகழ்பெற்ற லண்டனின் ஆங்கில தேசிய பாலே நடனப்பள்ளியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்பது கனவு. இந்தியாவிலிருந்து அப்பள்ளியில் படிக்க தேர்வான முதல் நபரும் இவர்தான்.
ஆனால், குடும்ப வறுமை காரணமாக கமல் சிங்கால் லண்டனில் நடனம் கற்க முடியவில்லை. அதனால் சோர்ந்து போயிருந்த அவருக்கு ரூ.3 லட்சம் நிதி கொடுத்து உதவியுள்ளார் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன்.
கமல் சிங்கின் கனவு குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதைப் பார்த்தவர் உடனடியாக மூன்று லட்சம் அளித்து ஊக்கப்படுத்தியுள்ளார். இந்த எதிர்பாராத மகிழ்ச்சியால், கமல் சிங்கின் பயிற்சியாளர் பெர்னாண்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிரித்திக் ரோஷனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
newstm.in