1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகர் திடீர் மரணம்.. திரைத்துறையினர் அதிர்ச்சி.. !

பிரபல நடிகர் திடீர் மரணம்.. திரைத்துறையினர் அதிர்ச்சி.. !


நடிகரும், எழுத்தாளருமான ரூபன்(54) திடீரென காலமானார்.

சின்னத்திரை எழுத்தாளராக முதலில் திரையுலக பயணத்தை ரூபன் தொடங்கினார். பின்னர் சின்னத்திரையில் நடித்து வந்த அவர் அவ்வப்போது ஒருசில படங்களில் தலைக்காட்டினார்.

விக்ரமின் தூள் படத்தில் டிக்கெட் பரிசோதகராக சிறிதளவு காட்சியில் தோன்றுவார். இதுபோன்று பல படங்களில் அவர் நடித்துள்ளார். திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது.

அதற்கு அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொரோனா தொற்றும் பாதித்ததாக கூறப்படுகிறது. இதனால் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் அவை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

நடிகர் ரூபன் மறைவையடுத்து திரைத்துறையினர் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like