அப்படி நடக்கவே இல்லை - பிரபல நடிகர் மறுப்பு..!
தமிழில் நேரம், ரிச்சி ஆகிய படங்களில் நடித்தவர் நிவின் பாலி. இந்நிலையில் சினிமாவில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகர் நிவின் பாலி மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிவின் பாலி மீது நெரியமங்கலத்தை சேர்ந்த பெண் புகார் அளித்த நிலையில், அவர் மீது எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் நிவின் பாலி மீதான வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், "நான் தவறாக நடந்துகொண்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார் என்ற செய்தியை பார்த்தேன். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல உறுதியாக இருக்கிறேன். இதனை சட்டப்படி கையாளுவேன்" என கூறியுள்ளார்.
— Nivin Pauly (@NivinOfficial) September 3, 2024
— Nivin Pauly (@NivinOfficial) September 3, 2024