நம்பிக்கையாக வீட்டில் சேர்த்த குடும்பம்.. பெண்ணை ஆபாசமாக படம்பிடித்து பரப்பிய இளைஞர்

காதலித்த பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த இளைஞர் போலீசார் பிடியில் சிக்கினார்.
மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்தவர் அஜ்மத் பைசல் (25). வேலைக்காக சென்னை வந்த இவர், செங்கல்பட்டில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். அங்கு உடன் பணிபுரிந்த, செங்கல்பட்டு திருமணியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருடன் பைசலுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு நேரத்தில், உணவு விடுதிகள் மூடப்பட்டு, பேருந்து சேவைகள் முடக்கப்பட்ட காலத்தை பயன்படுத்திய அஜ்மல் பைசல், இளம்பெண்ணின் வீட்டில் தங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இளம்பெண் வீட்டில் குளிக்கும்போது, உடைமாற்றும்போது, தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
பின்னர் ஒரு கட்டத்தில் இவர்களது காதல் விவகாரம், இளம்பெண்ணின் வீட்டுக்கு தெரிந்ததும், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அஜ்மத்பைசல், இளம்பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். அதற்கு பெண் வீட்டார் ஒப்புக் கொள்ளவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த அஜ்மத்பைசல், தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், இளம்பெண்ணை ஆபாசமாக எடுத்த வீடியோவை முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதனை, இளம்பெண்ணின் குடும்பத்தினர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இதனால் அவர், இளம்பெண்ணின் வீடியோவை சமூக வலைதளத்தில் பரவ செய்தார்.
இதனால் அறிந்து இளம்பெண் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பெண்ணின் பெற்றோர், செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், இளம்பெண்ணின் வீடியோவை இளைஞர் வெளியிட்டது தெரிந்தது. இதையடுத்து அஜ்மத்பைசல் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
newstm.in