இளம் மனைவியுடன் கள்ளக்காதல்.. நண்பனை சரமாரியாக வெட்டி வீசிய இளைஞர் !

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் ரகு(24), வினோதினி(21) தம்பதியர் வசித்து வருகின்றனர். ஆட்டோ டிரைவரான ரகுவின் நண்பர் மைலாப்பூரை சேர்ந்த கார்த்திக்(21), அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வார்.
அப்போது கார்த்திக் மற்றும் ரகுவின் மனைவி வினோதினிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாட்கள் செல்ல செல்ல கள்ளக்காதலாக மாறியது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு கார்த்திக் வினோதினியை அழைத்துக்கொண்டு அவரது வீட்டில் தங்க வைத்துள்ளார். அங்கு சென்ற ரகு வினோதினியை அழைத்துக்கொண்டு வந்துள்ளார். இதற்கிடையில், ரகு வீட்டில் இல்லாத சமயத்தில் கார்த்திக் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
இதனால் ரகு, கார்த்திக்கை பலமுறை எச்சரித்துள்ளார். தனது மனைவியுடன் உள்ள தொடர்பை துண்டிக்க கூறியுள்ளார். எனினும் தொடர்பு நீடிக்கவே ஆத்திரமடைந்த ரகு தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கார்த்திக்கை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி, கார்த்திக் கண்ணகி நகர் பகுதிக்கு வந்ததை அறிந்த ரகு தனது நண்பர்கள் 4 பேருடன் ஆட்டோவில் அங்கு சென்றார். பின்னர் அவர்கள் சேர்ந்து சுற்றிவளைத்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர். இதில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீசார் ரகுவின் உடலை மீட்டு விசாரணையை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீனா(19), ஜெயராஜ்(19) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரகு உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.
newstm.in