கள்ளக்காதல்… பெண்ணை நிர்வாணமாக்கி சாலையில் ஓடவிட்ட மக்கள்!

கள்ளக்காதல்… பெண்ணை நிர்வாணமாக்கி சாலையில் ஓடவிட்ட மக்கள்!

கள்ளக்காதல்… பெண்ணை நிர்வாணமாக்கி சாலையில் ஓடவிட்ட மக்கள்!
X

கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் ஒருவரை கிராம மக்கள் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஓடவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலம் சாங்லாங் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை அவரது கணவரும், மாமியாரும் அடித்து, உதைத்து கொடுமை செய்து வந்துள்ளனர். அதனால் அந்தப் பெண் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் அந்த பெண்ணும், இளைஞரும் கடந்த மாதம் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். இதை பற்றி கேள்விப்பட்ட கிராமத்து மக்கள், அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசி, திரும்ப வந்தால் விரும்பிய இளைஞருடன் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறினர்.

அந்தப் பெண்ணும் நம்பி வரவே, 50 பேர் சேர்ந்து அந்த பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்தும், துணிகளை உருவியும், குளிர்ந்த நீரில் தள்ளியும் ஊருக்குள் விரட்டினார்கள்.

அதை படம் பிடித்த ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ஊடகத்தில் வைரலானதும் போலீசார் அந்த கிராமத்திற்குள் நுழைந்து 15க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it