கள்ளக்காதல் விவகாரம்… ஸ்கெட்ச் போட்டு வழக்கறிஞரை அடித்தே கொன்ற இருவர்!

கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக வழக்கறிஞரை இரண்டு பேர் சேர்ந்து அடித்து கொலை செய்து ஆற்றில் வீசி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் துவரிமான் வைகையாற்றங்கரையில், மானாமதுரையை சேர்ந்த சாக்ரடீஸ் என்ற வழக்கறிஞரின் சடலம் கிடந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற நாகமலை புதுக்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில் சாக்ரடீஸ் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராக மதுரை வந்ததும் தெரியவந்தது. அப்போது, சாக்ரடீசை அவரது நண்பர் செந்தில் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.
அப்போது இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சாக்ரடீஸ் செந்திலின் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாகவும் தெரிகிறது. இதனை கண்ட செந்தில், சாக்ரடீஸ் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
தனது மனைவியை செந்தில் கண்டித்துள்ளார். அவர் கோவப்பட்டு செந்திலை பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் சாக்ரடீஸை கொலை செய்ய திட்டம் தீட்டினார் செந்தில்.
தனது நண்பரான சையது ஜாபர் என்பவருடன் சேர்ந்து சாக்ரடீசை அடித்துக்கொன்றார் செந்தில். அதன்பிறகு டலை ஆட்டோவில் எடுத்துச்சென்று ஆற்றில் வீசியதும் தெரியவந்தது.
இதனையடுத்து செந்தில் மற்றும் அவரது நண்பர் சையது ஜாபரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in