1. Home
  2. தமிழ்நாடு

போலி தமிழக மதிப்பெண் சான்றிதழ்.. அரசு பணிகளில் மோசடியாக சேர்ந்த வட மாநிலத்தவர்கள் !

போலி தமிழக மதிப்பெண் சான்றிதழ்.. அரசு பணிகளில் மோசடியாக சேர்ந்த வட மாநிலத்தவர்கள் !


தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றது போன்று போலி மதிப்பெண் சான்றிதழ்கள் வட இந்தியாவில் தயாரித்து மோசடி நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியாவில் உள்ள தபால் அலுவலகங்களில் சேர போலியாக, 500 தமிழ்நாடு மதிப்பெண் சான்றிதழ்கள் தந்துள்ளனர். போலி மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிக்கப்பட்டதை தமிழக அரசின் தேர்வுகள் துறை கண்டுபிடித்துள்ளது.

இதுவரை ஆய்வு செய்த 2,500 மதிப்பெண் சான்றிதழ்களில் சுமார் 1000 சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் போலி மதிப்பெண் சான்று தந்து 300 பேர் தமிழக தபால் அலுவலகங்களில் பணியாற்றி வருவதும் அம்பலமாகியுள்ளது.

போலி தமிழக மதிப்பெண் சான்றிதழ்.. அரசு பணிகளில் மோசடியாக சேர்ந்த வட மாநிலத்தவர்கள் !

பெரும்பாலான மதிப்பெண்கள் சான்றிதழ்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அச்சப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தி முதன்மை மொழியாக அச்சடிக்கப்பட்டு பெரும்பாலான சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளுக்கு தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் வடமாநிலத்தவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து தமிழகத்தில் வேலையில் சேர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Trending News

Latest News

You May Like