1. Home
  2. தமிழ்நாடு

பெண்ணை கொன்று கால்வாயில் சடலத்தை வீசிய போலி சாமியார்..!

1

திருநெல்வேலியை சேர்ந்தவர் கயல்விழி (28). இவர், திருமணமான இரண்டே ஆண்டில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டில் இருந்த கயல்விழி திடீரென மாயமானார்.

இது தொடர்பாக அவரது தந்தை சிவலிங்கதுரை பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கயல்விழி குறித்து புலன் விசாரணை நடத்தினர். அவருடன் நெருங்கி பழகிய தோழிகள் உள்பட பலரை விசாரித்தனர். ஆனாலும் 8 மாதங்களாக இந்த வழக்கில் துப்பு துலங்காமல் இருந்து வந்தது.

இதற்கிடையில் கயல்விழியின் செல்போன் எண்ணை தீவிரமாக ஆய்வு செய்தபோது, கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த சாமியார் சிவசாமி என்பவரை கயல்விழி அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது. எனவே சந்தேகத்தின் பேரில் சாமியார் சிவசாமியை போலீசார் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ''கணவரை பிரிந்து வசித்து வந்த கயல்விழி மீண்டும் கணவருடன் சேர்த்து வைக்கும்படி சாமியார் சிவசாமியை அணுகியுள்ளார். அதற்கு, மாந்திரீகம் செய்ய வேண்டும் என்று கூறி கயல்விழியிடம் சாமியார் சிவசாமி அதிகளவு பணம் பெற்றுள்ளார். ஆனால் கணவர் சேர்ந்து வாழ மறுத்ததால் சாமியார் சிவசாமியை கயல்விழி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். மாந்திரீகம் செய்வதாக கயல்விழியை ஏமாற்றிய சாமியார் சிவசாமி ஒரு கட்டத்தில் தனக்கு அடிக்கடி தொந்தரவு கொடுக்கும் கயல்விழியை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார்.

அதன்படி தனது உறவினர்களான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாயாண்டிராஜா, கொட்டாரத்தைச் சேர்ந்த சிவனேஸ்வரி மற்றும் நெல்லை வீரவநல்லூரை சேர்ந்த கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி கயல்விழியை கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்திற்கு வரவழைத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like