1. Home
  2. தமிழ்நாடு

ஹத்ராஸ் பெண்ணின் புகைப்படம் போலி! கொஞ்சம் பொறுப்புடன் நடந்துக்குங்க மக்களே!

ஹத்ராஸ் பெண்ணின் புகைப்படம் போலி! கொஞ்சம் பொறுப்புடன் நடந்துக்குங்க மக்களே!


கூட்டுபாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த ஹத்ராஸ் பெண்ணின் புகைப்படம் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்படுபவை போலி என கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், கூட்டுபாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டு டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

உயிரிழந்த ஹத்ராஸ் பெண் என்ற பெயரில் சில புகைப்படங்களை நெட்டிசன்கள் பகிர்ந்துவருகின்றனர். அந்த படங்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினருக்கு அந்த புகைப்படத்தை அனுப்பி கேட்ட போது அந்தப் படத்தில் இருப்பது தனது சகோதரி இல்லை என்று அப்பெண்ணின் சகோதரர் பதிலளித்தார்.

கரும்பு வயலில் நிற்கும் பெண் தற்போது உயிரிழந்த பெண் இல்லை என்பதை மற்ற குடும்ப உறுப்பினர்களும் உறுதிப்படுத்தினர். ஹத்ராஸில் உயிரிழந்த பெண் என்று பகிரப்படும் படத்தில் உள்ள பெண் மனிஷா யாதவ்.

உத்தரபிரதேசத்தின் அயோத்தி மாவட்டத்தை சேர்ந்த அவர் சண்டிகர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜூலை 22, 2018 அன்று உயிரிழந்துவிட்டார் என அப்பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

இந்த தவறான புகைப்படத்தை சில பிரபலங்களும், பத்திரிகை வலைத்தளங்களும் கூட பகிர்ந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like