1. Home
  2. தமிழ்நாடு

பெண்களை ஏமாற்றி உடலுறவில் ஈடுபட்டால் கடும் தண்டனை- மசோதா அறிமுகம்..!!

amith shah
பெண்களை ஏமாறச் செய்து, அவர்களுடன் உடலுறவு கொண்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வழிவகை செய்யும் புதிய மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு மக்களவை பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வரிசையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்துள்ள திருத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா மசோதா முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதன்படி பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் மசோதாவில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. பெண்களிடம் பொய்யான வாக்குறுதி கொடுத்துவிட்டு, அவர்களுடன் உடலுறவு ஈடுபட்டால் அது குற்றமாக கருதப்படும். அடையாளத்தை மறைத்துக் கொண்டு உடலுறவு கொண்டாலும், அதுவும் குற்றம் தான் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இதுதவிர காதல் என்கிற பெயரில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பெண்ணை ஏமாற்றி உடலுறவுக் கொண்டாலும் தண்டைக்குரிய குற்றம் தான். ஆனால் அது பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படாது. இதுபோன்று பெண்களை ஏமாற்றி அவர்களை தங்களுடைய தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள முயலுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த மசோதா மீது விரிவாக ஆய்வு மேற்கொள்ள தற்போது நாடாளுமன்ர நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பெண்களிடம் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால், குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்படும். இதுபோன்ற பாலியல் வன்கொடுமை வழக்கில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகள் பாதிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Trending News

Latest News

You May Like