1. Home
  2. தமிழ்நாடு

போலி இ - பாஸ் தயாரிப்பு !! கடை உரிமையாளர் , வாகன ஓட்டுனர் கைது !! வருவாய்த் துறையினர் சீல்...

போலி இ - பாஸ் தயாரிப்பு !! கடை உரிமையாளர் , வாகன ஓட்டுனர் கைது !! வருவாய்த் துறையினர் சீல்...


கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கு கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், திருமணம், இறப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு செல்வோர் இ-பாஸ் கட்டாயம் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போலி இ - பாஸ் தயாரிப்பு !! கடை உரிமையாளர் , வாகன ஓட்டுனர் கைது !! வருவாய்த் துறையினர் சீல்...

இதையடுத்து அரசுப் பேருந்துகளின் போக்குவரத்தும் மாவட்ட எல்லைகளில் நிறுத்தப்பட்டு, வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி திருச்சி -புதுக்கோட்டை சாலையில் குண்டூர் அருகே காவல் ஆய்வாளர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் கடந்த 27-ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திருச்சி நோக்கி வந்த வாகனத்தின் இ-பாஸ் விபரத்தை சரிபார்த்தில், அந்த இ-பாஸ் போலி என்று தெரியவந்தது. கார் ஓட்டுநர் திருவானைக்காவலைச் சேர்ந்த முரளியை (45) போலீசார் விசாரித்தனர்.

திருச்சி கொண்டையம் பேட்டையில் இருந்து இன்று காலை சிவகங்கைக்கு போலி இ-பாஸ் மூலம் சென்று திரும்பியதாக கூறியுள்ளார். அவருக்கு இ-பாஸ் போலியாக தயாரித்துக் கொடுத்தவர் ஸ்ரீரங்கத்தில் கணினி மையம் நடத்தி வரும் சீனிவாசன்(37) என்றும் தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கார், மற்றும் கம்ப்யூட்டர், பிரிண்டர்களையும் பறிமுதல் செய்தனர்.இவர்கள் மூலம் போலி இ-பாஸ் பயணம் இது மட்டும்தானா ? இன்னும் பலருக்கு போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்துள்ளனரா ? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், போலி இ-பாஸ் தயாரித்த சீனிவாசனின் கணினி மையத்திற்கு போலீசார், கட்டட உரிமையாளர்கள் முன்னிலையில் வருவாய்த்துறையினர் மூடி சீல் வைத்தனர். போலி இ-பாஸ் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like