1. Home
  2. தமிழ்நாடு

கணித தேர்வில் தோல்வி.. தங்கையை சுட்டுக்கொன்ற அண்ணன்..!

1

9-ம் வகுப்பில் கணித தேர்வில் தோல்வியடைந்த தங்கையை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஒகாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவு நேரத்தில் தாய் உறங்கிய பின்பு தேர்வில் தோல்வியடைந்தது குறித்து தங்கை சஜிதாவிடம் அவரது அண்ணன் அதில் உசைன் கேள்வி கேட்டுள்ளார். அது பின்பு வாக்குவாதமாக மாறியுள்ளது.

gun

சத்தம் கேட்டு முழித்த தாய் தனது மகனிடம் சண்டையை நிறுத்துமாறு கோரியுள்ளார். ஆனால் தாயின் பேச்சை கேட்காத உசைன் தனது துப்பாக்கியை எடுத்து தங்கையை சுட்டுள்ளார். பின்பு துப்பாக்கியுடன் அங்கிருந்து அவர் தப்பி ஓடியுள்ளார்.

Dead-body

துப்பாக்கி சூட்டால் பலத்த காயமடைந்த சஜிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாயார் கொடுத்த புகாரின் பேரில் அவரது மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like