#FACT CHECK : டைம்ஸ் ஸ்கொயரில் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு என்று பரவும் புகைப்படம் உண்மையா?
தமிழ்நாட்டை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்திய பொருளாதாரத்துக்கு மிக முக்கிய பங்களிக்கிற மாநிலமாகவும் தமிழ்நாட்டை உயர்த்திடும் பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின், இதற்காக அவர் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார். ஏற்கனவே ஜனவரியில் உலக தமிழ் முதலீட்டாளர் மாநாட்டை நடத்திய நிலையில், இந்த மாதமும் தொழில் முனைவோர் மாநாட்டை கூட்டி, பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டார்.
இந்த நிலையில், அமெரிக்க முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும் அமெரிக்கவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று Times Square-ல் கொடுக்கப்பட்ட வரவேற்பு” என்று செய்திகள் வெளியானது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தமிழர்கள் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் அவரை வரவேற்கும் வகையில் தகவல் வெளியானது போன்று புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
முதலில் இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடிப் பார்த்தோம். அப்போது நியூயார்க் Times Square Extraordinaire என்ற பெயரில் இருந்த ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் நமக்குக் கிடைத்தது. ஆனால், அதில் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இல்லை. இந்த புகைப்படத்தை எடுத்து மு.க.ஸ்டாலினை வரவேற்பது போன்ற படத்தை வைத்து எடிட் செய்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
டைம்ஸ் ஸ்கொயரில் இலவசமாக வரவேற்பு உள்ளிட்டவை போடப்படுவது இல்லை. அங்கு யார் வேண்டுமானாலும் விளம்பரம் செய்யலாம். விளம்பரம் செய்வது தொடர்பாக டைம்ஸ் ஸ்கொயர் ஃபேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.