பேஸ்புக் காதல்… தனியே வரவழைத்து சிறுமியை கற்பழித்த 3 பேர்!

பேஸ்புக் காதலனை நேரில் பார்க்க சென்ற 13 வயது சிறுமியை மூன்று பேர் காரில் வைத்து கற்பழித்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். 8ஆம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தரணி (22) என்ற இளைஞர் பேஸ்புக் மூலம் அறிமுகமானார்.
இருவரும் மணிக்கணக்கில் பேசி வந்தனர். அதன்பிறகு பழக்கம் காதலாக மாறியது. இதனையடுத்து இளைஞரை நேரில் சந்திக்க வேண்டும் என சிறுமி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு விபின்ராஜ் என்ற மற்றொரு இளைஞரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் தனது பேஸ்புக் காதலரை பற்றி சிறுமி கூறியிருக்கிறார். இதனையடுத்து சிறுமியின் காதலனை பார்க்க உதவி செய்வதாக கூறியுள்ளார் விபின்ராஜ்.
விபின்ராஜை நம்பி அவருடந் பேஸ்புக் காதலரை சந்திக்க அச்சிறுமி சென்றார். விபின்ராஜ், அவரது நண்பரான அஜித்ராஜ், ஜோபின் ஆகியோரையும் அழைத்துக் கொண்டு ஓசூர் அழைத்துச் செல்லலாம் என்று காரில் சென்றுள்ளனர்.
இந்நிலையில் வழியில் காரை நிறுத்தி மூன்று பேரும் சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. பின்னர், ஓசூர் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு அந்த மூன்று பேரும் திரும்பி சென்றுவிட்டனர்.
பேருந்து நிலையத்தில் நின்ற சிறுமி, காதலன் தரணிக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே காதலன் வந்து மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார். இதனிடையே சிறுமியை காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செல்போன் சிக்னல் மூலம் சிறுமி கிருஷ்ணகிரி பகுதியில் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து பேரிகை சென்ற காவல்துறையினர், சிறுமியை மீட்டனர். காதலன் தரணியையும் கைது செய்தனர்.
விசாரணையில் தன்னை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி காவல்துறையினரிடம் தெரிவித்தார். இதன் அடிப்படையில், விபின்ராஜ், அஜித்ராஜ், ஜோபின் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
newstm.in