உச்ச கட்ட பதற்றம்..! ஈரானுக்கு உதவ தயார்: ரஷியா அறிவிப்பு..!

இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது. ஈரானின் அணு திட்ட கட்டமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ரஷிய அதிபர் மாளிகை கூறியிருப்பதாவது: ஈரானுக்கு என்ன தேவையோ அதை பொறுத்து செய்வோம். பேச்சுவார்த்தைக்கு உதவ தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.