உச்சகட்ட கொடூரம்... 45 வயது பெண்ணை பலாத்காரம் செய்த பள்ளிச் சிறுவர்கள் !!

பலாத்கார வழக்கில் பள்ளி சிறுவர்கள் வெறும் காமத்திற்காக மட்டுமே வாழும் வாழ்க்கை போல் தற்போது வாழும் வாழ்க்கை உள்ளது. வாழ்வில் வேறு எதுவுமே இல்லையா என்று நினைக்கத் தோன்றுகிறது. இல்லையென்றால் பள்ளிச் சிறுவர்கள் 45 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வார்களா?
மருமகனே மாமியாரை பலாத்காரம் செய்வது போல் வீடியோ எடுத்து ஆதாரமாக வைத்துக் கொள்வார்களா? இப்படி நம் கற்பனைக்கும் எட்டாத சம்பவங்கள் தற்போது அதிகமாக நடந்து வருகிறது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் நடந்துள்ளது.
அங்கு 45 வயதான பெண்ணொருவர் தன்னுடைய மருமகனுடன் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த இரவு நேரத்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களை வழி மறித்தது. அந்த ஆறு பேரைக் கண்டு பயந்து போன பைக்கை ஓட்டி வந்த அந்த பெண்ணின் மருமகன் பைக்கை ஓரம் கட்டி நிறுத்தினார்.
அப்போது அந்த கும்பல் மருமகனை கட்டி போட்டுவிட்டு அந்த 45 வயது பெண்ணை பலாத்காரம் செய்தது. மேலும் அந்த பலாத்கார காட்சியை வீடியோவாகவும் பதிவு செய்தது. இந்த பெண்ணை பலாத்காரம் செய்த ஆறு பேரில் இரண்டு பேர் பள்ளி சிறுவர்கள் என்பது மேலும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும். பிறகு அந்த பெண் இந்த விவகாரத்தை போலீசில் புகாரளிக்காமல் இருக்க அவர்கள் அவரின் மருமகனே அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சிப்பது போல் வீடீயோ எடுத்தனர்.
பிறகு அவர்களை அங்கேயே விட்டு விட்டு அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். இந்த விஷயத்தை முதலில் அந்த பெண் போலீசில் புகாரளிக்காமல் தான் இருந்தார். ஆனால் அந்த பலாத்கார சம்பவத்தை வீடியோ எடுத்த அந்த வாலிபர் கூட்டம் அந்த விடீயோவினை சமூக ஊடகத்தில் வைரலாக்கியது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் போலீசில் சென்று புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளில் மூன்று பேரை கைது செய்து விட்டனர். மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
newstm.in