தமிழகத்தில் வேற்று கிரகவாசிகள்..??வானில் சிவப்பு நிற `பறக்கும் தட்டு
மனித சமூகம் கடந்த சில நூற்றாண்டுகளாகவே வேற்றுகிரக வாசிகள் குறித்த தீவிர ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. மனிதன் நிலவில் கால் வைத்தது தொடங்கி தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சிகள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வரை அனைத்துமே வேற்றுகிரக வாசிகளை தேடும் மனித ஆராய்ச்சியின் ஒரு அங்கம்தான்.
உலகம் முழுக்க பல நாடுகளில் மக்கள் பலர் தாங்கள் ஏலியன்களை பார்த்து உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். அதேபோல் பலர் தாங்கள்எப் யுஎப்ஓக்களை பார்த்ததாகவும் குறிப்பிட்டு உள்ளனர்.
உலகம் முழுக்க யுஎப்ஓ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள், பறக்கும் சாதனங்கள் குறித்து மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு. வித்தியாசமான பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு. அமெரிக்காவில் இது குறித்து பலர் புகார் வைத்து இருந்தாலும் கூட, கடந்த வருடம் வரை அமெரிக்கா இந்த யுஎப்ஓ குறித்து அதிகாரபூர்வமாக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தட்டுகளை மக்கள் பார்த்ததை மறுத்து வந்த அமெரிக்கா கடந்த 2021ம் வருடம் இப்படி தட்டுகள் பறந்தது உண்மைதான் என்றது.
இந்த நிலையில்தான் தர்மபுரி அருகே இரவில் பறக்கும் தட்டு பறந்ததாக, அதனை நேரில் பார்த்தவர் பதிவு செய்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் நேற்றிரவு (நவ.1) தனது குடும்பத்துடன் மேட்டூரில் இருந்து காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வானில் சிவப்பு நிறத்தில் தட்டு போன்ற வடிவில் ஒரு பொருள் பறந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், ஏலியன் பயன்படுத்தும் பறக்கும் தட்டாக இருக்கலாம் என கூறி வீடியோ எடுத்துள்ளார்.