பஸ்சில் வன்முறையை தடுப்பதில் ஓட்டுநர், நடத்துனருக்கு கூடுதல் அதிகாரம்..!

பஸ்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை தடுப்பதில் ஓட்டுநருக்கு உள்ள பொறுப்புகளை தமிழக அரசு வரையறுத்து, அதற்கான வரைவு சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இது தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பஸ்சில் பயணிக்கும் ஆண் பயணி ஒருவர், பெண் பயணிகளுக்கு எதிராக பாட்டு பாடியும், விசில் அடித்தும், அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசியும், கைபேசியில் வீடியோ, போட்டோ எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், பஸ்சை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, தொடர்புடையவர் மீது ஓட்டுநர் புகார் அளிக்க முடியும்.
அத்துடன், சரியான காரணங்கள் இருப்பின், பயணியை பஸ்சில் இருந்து கீழே இறக்கிவிட ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. பஸ்சில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க ஏதுவாக, பஸ்களில் புகார் புத்தகம் வைக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் ஆட்சபனை மற்றும் கருத்துகளை, தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறை செயலருக்கு தெரிவிக்கலாம் என்றும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.