1. Home
  2. தமிழ்நாடு

ரூ.1000 மகளிர் உரிமை தொகை விரிவாக்கம்.. யாருக்கெல்லாம் கிடைக்கும் ?

1

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்ட நிலையில், 90 சதவீத மகளிருக்கு உரிமைத்தொகை சென்று சேர்ந்துவிட்டது என்றும், தகுதியான ஒருசிலர் விடுபட்டு இருந்தால் அந்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். விரைவில் இவர்களுக்கும் பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் இரண்டரை லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பணம் வழங்கப்பட உள்ளது. இதற்கு முக்கியமான சில ஆவணங்கள் தேவை.பின்வரும் மக்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

1. முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படலாம்.

2, முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படலாம்.

3. புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு பணம் வழங்கப்படலாம்.

4. புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படலாம்.

இதில் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆவணங்கள் என்னென்ன?:

1. புதிய ரேஷன் அட்டை

2. திருமணம் செய்யப்பட்ட சான்று

3. குடும்ப தலைவி பெயர் உள்ள வங்கி கணக்கு

4. அந்த வங்கி கணக்கு ஆதார் + அந்த பெண்ணின் போன் என்னுடன் இணைக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like