எடப்பாடிக்கு வெடிகுண்டு மிரட்டல்! வாலிபர் கைது!
சேலையூரை சேர்ந்த வினோத் குமார் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, வினோத்குமார் போன் செய்து, சற்று நேரத்தில் முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது’ என்று மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
உடனடியாக உஷாரான போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்கும் சென்று சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் மிரட்டல் வந்த தொலைப்பேசி நம்பரை ஆய்வு செய்த போது வினோத்குமார் இருந்த இடம் தெரிய வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்குமாரை பிடித்து விசாரித்ததில், நான் இல்லை என்று மறுத்துள்ளார். பின்னர் தீவிர விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் கொடுத்ததை ஒப்புக் கொண்டார் .
ஊரடங்கு காரணமாக வேலையில்லை. வருமானமும் இல்லாததால் என் மனைவி சரியாக எனக்கு சாப்பாடு கொடுக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தேன் என்றும் கூறியுள்ளார். பின்னர், போலீசார் அவரை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
newstm.in