ஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி!

வருகிற ஜூன் 1ம் தேதி முதல் பாக்கெட்டில் அடைக்காமல் உதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி மற்றும் எந்த தேதி வரை சாப்பிடலாம் என்று குறிப்பிடுவது கட்டாயம் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவித்துள்ளது.
 | 

வரும் ஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி!

சில்லறையில் விற்பனை செய்யப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி குறிப்பிடுவது கட்டாயம் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.இது குறித்து இனிப்புக் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

                                         வரும் ஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி!

வருகிற ஜூன் 1ம் தேதி முதல் பாக்கெட்டில் அடைக்காமல் உதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி மற்றும் எந்த தேதி வரை சாப்பிடலாம் என்று குறிப்பிடுவது கட்டாயம் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவித்துள்ளது. கண்ணாடி பெட்டியிலோ, தட்டிலோ வைக்கப்படும் இனிப்புகளிலும் மேற்கண்ட விவரங்களை எழுதிவைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுகிறதா இல்லையா என உணவு பாதுகாப்பு ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. 
பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் இனிப்புகளில் கட்டாயம் தயாரிப்பு தேதியை குறிப்பிடுவது ஏற்கனவே அமுலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP