திமுகவில் இருந்து நீக்கம்..!
ரூ.70 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதன்படி, ராமநாதபுர மாவட்ட நிர்வாகி சையது இப்ராஹிம்மை கட்சியிலிருந்து நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
'கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட இவருடன் கட்சியினர் யாரும் தொடர்புகொள்ள வேண்டாம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.