1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் எம்எல்ஏ மீது மருமகள் வரதட்சணை புகார்! அதிர்ச்சியில் அதிமுக..!

Q

அதிமுகவின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருபவர் கே.பி.கந்தன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு சோழிங்கநல்லூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இவரது மகன் கே.பி.கே. சதீஷ்குமார் சென்னை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் சென்னை மாநகராட்சியின் 182 வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு சதீஷ்குமாருக்கும், ஸ்ருதி பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஸ்ருதி நுரையீரல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு இந்த தம்பதிகளுக்கு மகள் பிறந்துள்ளார்.
திருமணத்தின் போது ஆயிரம் சவரன் நகைகளை வரதட்சணையாக வழங்க வேண்டும் என கே.பி.கந்தன் குடும்பத்தினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அவ்வளவு கொடுக்க முடியாது எனக் கூறிய பெண் வீட்டார், திருமணத்தின்போது 600 சவரன் நகைகளை வழங்கியுள்ளனர். இதில் 100 சவரன் நகைகள் சதீஷ்குமாருக்கும் 500 சவரன் நகைகள், ஸ்ருதிக்கும் போடப்பட்டுள்ளது.
மேலும் 1.65 கோடி மதிப்புள்ள இரண்டு சொகுசு கார்கள், 20 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக ஸ்ருதி தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் 2021-ம் ஆண்டு முதல் மீதமுள்ள 400 சவரன் நகைகளை வரதட்சணையாக கொண்டு வர வேண்டும் என கே.பி.கந்தன் குடும்பத்தினர் ஸ்ருதியை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன், அவரது மகன் கே.பி.கே.சதீஷ்குமார், மனைவி, மகள் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஸ்ருதி மற்றும் அவரது தந்தை ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். குழந்தை பிறந்ததிலிருந்து தன்னை கே.பி.கந்தன் குடும்பத்தினர் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Trending News

Latest News

You May Like