1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் மகன் சென்னை விமான நிலையத்தில் கைது..!

Q

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதனின் மகன் ராஜா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி 19 வது வார்டு கவுன்சிலராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார்.

இவர் நிறுவனங்களில் முதலீடு செய்தால், பங்கு தருவதாக கூறி,தனது கணவர் சொத்துகளை அடமானம் வைத்து ரூ.17 கோடி மோசடி செய்ததாக சகோதரி பொன்னரசி போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், மலேஷியா தப்ப முயன்ற ராஜாவை, போலீசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்

Trending News

Latest News

You May Like