முன்னாள் அமைச்சர் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு..!
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சந்திர பிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் சந்திரபிரியங்கா. அவரது செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து முதலமைச்சர் ரங்கசாமியால் அவரது பதவி பறிக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும், அவரது கணவர் சண்முகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன் சந்திரபிரியங்காவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது கணவர் சண்முகம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீநிவாசை சந்தித்து சந்திரபிரியங்கா புகார் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று அவர், காரைக்கால் குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன் ஆஜராகி, கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார்.