1. Home
  2. தமிழ்நாடு

வெளியான கருத்துக்கணிப்பு : தமிழக வெற்றிக் கழகம் 23% வாக்குகள் பெறும்..! அப்போ திமுக - அதிமுக ?

1

சென்னையில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முன்னாள் நீதிபதி சந்துரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

விழாவில் நடிகர் விஜய் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூலை வெளியிட்டார். விஜயிடம் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இதில் நடிகர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். திமுகவின் பெயரை கூறாமல் அவர் கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

விஜய் பேசும்போது, "சமூக நீதி பேசும் இங்கு இருக்கும் அரசு, வேங்கைவயல் விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததுபோலவே எனக்கு தெரியவில்லை. இத்தனை வருடங்கள் கடந்தும் ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை. மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கட்சிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அவர்களை நம்பி இருமாப்புடன் 200 தொகுதிகளை வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை. நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026ல், மக்களே மைனஸாக்கி விடுவார்கள். மக்களே மைனஸாக்கி விடுவார்கள்'' என்றார்.

விஜயின் இந்த பேச்சை திமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜயை அரசியல்வாதியாக திமுக அங்கீகாரம் செய்யவில்லை என்று விருதுநகரில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் 2026 சட்டசபை தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.. யாருக்கு வாக்கு சதவிகிதம் கிடைக்கும் என்று சாணக்யா டிவி கருத்து கணிப்பு வெளியிட்டு உள்ளது. 

நாம் தமிழர் - 5% வாக்குகளை வெல்லும்

பாஜக - 18% வாக்குகளை வெல்லும் 

தமிழக வெற்றிக் கழகம்- 23% வாக்குகளை வெல்லும்

அதிமுக - 23% வாக்குகளை வெல்லும்

திமுக - 31% 

அதன்படி திமுக தனிப்பட்ட வகையில் 37.70 சதவிகித வாக்குகளை வென்ற நிலையில் வாக்குகள் 31 ஆக குறையும்.

மேலும் அதிமுக 33.29 சதவிகித வாக்குகளை வென்ற நிலையில் தனிப்பட்ட வகையில் அவர்கள் 10% வாக்குகளை இழந்து 23% வாக்குகளை வெல்லும் என்று கூறப்பட்டு உள்ளது.

புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம்- 23% வாக்குகளை வெல்லும் என்று சாணக்யா டிவி கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுகவிற்கு இணையாக தமிழக வெற்றிக் கழகம் வாக்குகளை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக - திமுகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறிய நிலையில்.. அதிமுகவிற்கு இணையாக தமிழக வெற்றிக் கழகம் வாக்குகளை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like