1. Home
  2. தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு வெளியீடு..!

1

பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியான நிலையில், பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளிலும் சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 19 அன்று முதல்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கிய பாராளுமன்ற மக்களவைத் தேர்தலின் இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து நடைபெற்றன. ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறகிறது.

வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை, சனிக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு வெளியிடலாம் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், செய்தி ஊடகங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக தோ்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளுக்கும் கடந்த ஏப். 19-இல் தோ்தல் தொடங்கி நேற்றுடன் நாட்டின் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. ஏழாவது கட்டமாக 57 தொகுதிகளுக்கு நேற்று இறுதிக்கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து, வாக்குப் பதிவுப் பிந்தைய கருத்துகளை கணிப்புகளை அச்சு, காட்சி ஊடகங்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் வெளியிட்டன.

தற்போது வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, என்டிடிவி வெளியிட்டுள்ள கணிப்பின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 365 இடங்களைப் பெறும் என்றும், இன்டியா கூட்டணி 142 இடங்களைப் பெறும் என்றும், இதரக்கட்சிகள் 36 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவித்துள்ளது. இன்டியா நியூஸ் டி டைனமிக்ஸ் வெளியிட்டுள்ள கணிப்பின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 371 இடங்களைப் பெறும் என்றும், இன்டியா கூட்டணி 125 இடங்களைப் பெறும் என்றும், இதரக்கட்சிகள் 47 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

ஜன் கி பாத் வெளியிட்டுள்ள கணிப்பின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 362-392 இடங்களைப் பெறும் என்றும், இன்டியா கூட்டணி 141 - 161 இடங்களைப் பெறும் என்றும், இதரக்கட்சிகள் 10 - 20 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவித்துள்ளது. ரிபப்ளிக் பாரத் மேட்ரைஸ் வெளியிட்டுள்ள கணிப்பின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 353 - 368 இடங்களைப் பெறும் என்றும், இன்டியா கூட்டணி 118 - 133 இடங்களைப் பெறும் என்றும், இதரக்கட்சிகள் 43 - 48 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவித்துள்ளது. ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள கணிப்பின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 359 இடங்களைப் பெறும் என்றும், இன்டியா கூட்டணி 154 இடங்களைப் பெறும் என்றும், இதரக்கட்சிகள் 30 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணியே வெல்லும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஆக்ஸிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் திமுக - இன்டியா கூட்டணிக் கட்சிகள் 26 - 30 தொகுதிகளில் வெல்லும் என்றும், பாஜக - தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 - 3 தொகுதிகளில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிபி - சி ஓட்டர் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்கு 46.3 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 18.9 சதவீத வாக்குகளும் கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக 21 சதவீத வாக்குகளை பெறும் என்றும், இதர கட்சிகள் 13.8 சதவீத வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் 18 சானல்

நியூஸ் 18  நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் இன்டியா கூட்டணி ஒட்டுமொத்தமாக உள்ள 39 தொகுதிகளில் 36 முதல் 39 தொகுதிகளையும் கூட கைப்பற்றலாம் என்றும், பாஜக தலைமையிலான கூட்டணி ஒரு தொகுதியில் வெற்றி பெற்று தமிழகத்தில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியா டிவி - சிஎன்எக்ஸ்

இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுக இடம்பெற்றுள்ள இன்டியா கூட்டணியின் கை ஓங்கும் என்றாலும், பாஜக கூட்டணி ஐந்து முதல் ஏழு இடங்களில் வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் இந்தியா கூட்டணி 33 - 37 தொகுதிகளில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 - 4 தொகுதிகளிலும் அதிமுக 0- 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த இடங்கள்: 543 இடங்கள்

பெரும்பான்மை: 272 இடங்கள்

1) ரிபப்ளிக் டிவி:

பா.ஜ., கூட்டணி: 371 இடங்கள்

இன்டியா கூட்டணி: 127

2) இந்தியா டிவி:

பா.ஜ., கூட்டணி: 371.

இன்டியா கூட்டணி 125

3) என்.டி.வி. (ரிப்பளிக் பாரத் பி-மார்க்)

பா.ஜ., கூட்டணி : 359.

இன்டியா கூட்டணி: 154.

4) ரிபப்ளிக் பாரத் மேட்ரிக்ஸ்

பா.ஜ., கூட்டணி: 353 முதல் 368.

இன்டியா கூட்டணி: 118 முதல் 133 இடங்கள்.

பிற கட்சிகள் : 43-48 இடங்கள்

5) டி.வி.5 தெலுங்கு

பா.ஜ., கூட்டணி: 359.

இன்டியா கூட்டணி 154.

பிற கட்சிகள்: 31.

6) இந்தியா நியூஸ் டி. டைனமிக்ஸ்

பா.ஜ., கூட்டணி: 371.

இன்டியா கூட்டணி 125.

பிறக்கட்சிகள்: 47.

7) ஜான்கிபாத்:

பா.ஜ., கூட்டணி: 362 முதல் 392 இடங்கள்.

இன்டியா கூட்டணி: 141 முதல் 161 இடங்கள்.

8) நியூஸ் எக்ஸ்:

பா.ஜ., கூட்டணி: 371.

இன்டியா கூட்டணி: 125.

பிறக்கட்சிகள்: 45

9) நியூஸ் நேசன்

பா.ஜ., கூட்டணி: 342 முதல் 378 இடங்கள்

இன்டியா கூட்டணி: 153 முதல் 179 இடங்கள்.

தமிழகத்தில்

1) சி.என்.என்:

தி.மு.க., கூட்டணி: 36 - 39.

பா.ஜ.,கூட்டணி: 1-3.

அ.தி.மு.க., : 0-2.

2) இந்தியா டுடே

தி.மு.க., கட்டணி: 26-30.

அ.தி.மு.க.,: 0 - 2

பா.ஜ.,: 1-3

பிற கட்சிகள் 6-8

3) இந்தியா நியூஸ்

தி.மு.க., கூட்டணி: 28.

அ.தி.மு.க., கூட்டணி: 5.

பா.ஜ., : 02.

பிற கட்சிகள்: 04

4) டிவி 9

தி.மு.க., : 35.

பா.ஜ., : 4. 

5) ஜன்கி பாத்

தி.மு.க., :34-38.

பா.ஜ.,:5.

அ.தி.மு.க.,: 01.

6) ஏபிபி

தி.மு.க.,: 37 - 39.

பா.ஜ., : 0 - 2.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like