எக்சிட் போல் முடிவுகள் வெளியீடு..! மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜகவுக்கே பெரும்பான்மை
மகாராஷ்டிராவைப் பொறுத்தவை பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மேட்ரிஸ், பீப்பிள்ஸ் பல்ஸ், சாணக்யா, டைம்ஸ் நவ்-ஜேவிசி மற்றும் போல் டைரி ஆகியவை கணித்துள்ளன. டெனிக் பாஸ்கர், லோக்ஷாஹி மராத்தி-ருத்ரா, பி - மார்க் ஆகியவை தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளன.
ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி 45 முதல் 50 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் சாணக்கியா ஸ்ட்ராடஜிஸ் தெரிவித்துள்ளது. மெட்ரிஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 42 - 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற கருத்துக் கணிப்புகளும் பாஜக பெரும்பான்மையை நெருங்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளன.
இரு மாநிலங்களிலும் எந்த கட்சிக்கு ஆட்சிக்கு வரும் என்ற விடை, வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரியவந்துவிடும்.