1. Home
  2. தமிழ்நாடு

வெளியான எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு : பாஜக கூட்டணி 350+, இண்டியா கூட்டணி 130+

1

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக கூட்டணி 350+ இடங்களிலும், இண்டியா கூட்டணி 130+ இடங்களிலும், இதரக் கட்சிகள் 40+ இடங்களிலும் வெற்றி பெற சாத்தியக் கூறு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிபப்ளிக் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு:

பாஜக கூட்டணி – 353 முதல் 358
இண்டியா கூட்டணி- 118 – 133
மற்றவை – 43 – 48

இண்டியா டுடே – Matrize கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி – 353 முதல் 368
இண்டியா கூட்டணி – 118 முதல் 133
மற்றவை – 43 முதல் 48

இண்டியா டுடே – PMARQ கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி – 354
இண்டியா கூட்டணி – 154

ஜன் கி பாத் கருத்துக் கணிப்பு:

பாஜக கூட்டணி: 362 – 392
இண்டியா கூட்டணி: 141 – 161 வரை
மற்றவை: 10 – 20

இந்தியா நியூஸ் – டி டைனமிக்ஸ் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி – 371
இண்டியா கூட்டணி – 125
மற்றவை – 30

நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி – 342+
இண்டியா கூட்டணி – 153+
மற்றவை – 21+ தொகுதிகளில் வெற்றி (இதுவும் சார்)

இந்தியா டுடே ஆக்சிஸ் கருத்துக் கணிப்பு (தமிழகம்):
திமுக கூட்டணி – 33+
பாஜக கூட்டணி 2 முதல் 4

ஏபிபி – சி-வோட்டர் கணிப்பு (தமிழகம்):
திமுக கூட்டணி – 37
பாஜக – 2

தமிழகம், கேரளா, கர்நாடகா நிலவரம்: அதேபோல் இண்டியா டுடே கருத்துக் கணிப்பின்படி தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவுக்கு 2 முதல் 4 சீட்கள், அதிமுகவுக்கு 0 முதல் 2, திமுக கூட்டணிக்கு 33 முதல் 37 சீட்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் பாஜக கூட்டணி 23 முதல் 25 இடங்கள், இண்டியா கூட்டணி 3 முதல் 5 இடங்களில் வெற்றி பெறலாம் எனத் தெரிவித்துள்ளது. கேரளாவில் பாஜக கூட்டணி 2 முதல் 3 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயக முன்னணி 17 முதல் 18 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி ஒரே ஓரிடத்திலும் வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

7 கட்டங்களாக நடந்த தேர்தல்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டமாக 543 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இவற்றில் குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும்பாஜக வேட்பாளர் முகேஷ் தலால்போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

7 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன. எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது அன்றைய மாலைக்குள் தெரிந்துவிடும். இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளன.     

Trending News

Latest News

You May Like