ஆண் சட்டை இல்லாமல் இருந்தால் உடற்பயிற்சி...அதுவே பெண் சட்டை இல்லாமல் இருந்தால்...நடிகைகொற்றவை பதிவு வைரல்!

ஆண், சட்டை இல்லாமல் இருந்தால் உடற்பயிற்சி, பெண் சட்டை இல்லாமல் இருந்தால் நிர்வாணம் என்பது ஏன்?
நடிகை கொற்றவை இன்று(மே 25) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகிறது.
அதில், என் உடல் என் உடைமையல்ல! கணவனுக்கோ, இணையருக்கோ, உங்கள் கௌரவத்திற்கோ அல்ல. ஆண், சட்டை இல்லாமல் இருந்தால் உடற்பயிற்சி, பெண் சட்டை இல்லாமல் இருந்தால் நிர்வாணம் என்பது ஏன்? இந்தப் பதிவு பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்டுள்ளது" என்று, புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
My body is not your property! என் உடல் உங்கள் உடைமையல்ல! My body is not for my Husband! என் உடல் என் கணவனுக்கானதுமல்ல!...
Posted by Kotravai N on Sunday 25 May 2025