1. Home
  2. தமிழ்நாடு

மலேசியத் தமிழரின் தூக்கு தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்திவைப்பு..! திக் திக் நிமிடங்கள்..!

1

மலேசியாவை சேர்ந்த தமிழர் பன்னீர்செல்வம் என்பவர் 52 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். அந்நாட்டு சட்டப்படி 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவா் பிடிபட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும் என்ற நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இன்று நிறைவேற்றப்படும் என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தண்டனையை நிறுத்த வேண்டும் என்றும், பன்னீர் செல்வத்திற்கே தெரியாமல் கடத்தல் நடைபெற்றதாகவும், உண்மையான குற்றவாளி அவர் இல்லை என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்த நிலையில், பன்னீா் செல்வம் பரந்தாமனை இன்று தூக்கிலிட சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனா். இதற்கு எதிராக மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பன்னீர் செல்வத்தின் தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

பன்னீர் செல்வம் நேரடியாக இந்த குற்றச்செயலில் ஈடுபடவில்லை என்பதால், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பன்னீர்செல்வத்தின் தண்டனையை நிறுத்தி வைக்க சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Trending News

Latest News

You May Like