1. Home
  2. தமிழ்நாடு

கதறி அழுத முன்னாள் துணை முதல்வர்: வைரல் வீடியோ!

1

தெலங்கானா மாநிலத்தில் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் தெலங்கானா தனிமாநிலமாக உருவானதில் இருந்து மொத்தம் இரண்டு சட்டமன்ற தேர்தல்கள் அங்கு நடைபெற்றுள்ளது. இந்த இரண்டு தேர்தல்களிலும் கே.சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தான் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், தெலங்கானா மாநில சட்டமன்றத்துக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில் அங்குள்ள 119 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அண்மையில் அறிவிக்கப்பட்டது.அதில், ஸ்டேஷன் கான்பூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை முதல்வருமான தட்டிகொண்ட ராஜய்யாவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஸ்டேஷன் கான்பூர் தொகுதியில் மூத்த தலைவரான கடியம் ஸ்ரீஹரியை வேட்பாளராக அறிவித்துள்ளார் கே.சி.ஆர்.

இதனால் மனமுடைந்த ராஜய்யா தனது தொகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற போது அங்கு தரையில் மண்டியிட்டு கதறி அழுதுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் கடந்த  2011 ஆம் ஆண்டு பிஆர்எஸ் கட்சியில் இணைந்தார்.தெலங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட பிறகு 2014-ல் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ-வான ராஜய்யாவுக்கு துணை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 


 

Trending News

Latest News

You May Like