பரபரப்பு! திமுகவை கடுமையாக விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்!!

திமுகவை கடுமையாக விமர்சித்து சென்னையில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு திமுகவை விமர்சித்து கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதனால் ஆத்திரம் அடைந்த திமுகவினர் அந்த போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். அதனைத் தொடர்ந்து போஸ்டர்களை கிழித்தவர்கள் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
திமுகவினர் மீதான வழக்குப்பதிவுக்கு எதிராக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டம் ஈடுபட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஸ்டாலினை விமர்சித்து சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தரமணி, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், அதிமுகவை உயர்த்தியும், திமுகவை விமர்சித்தும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
newstm.in