1. Home
  2. தமிழ்நாடு

பரபரப்பு! அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு!!

பரபரப்பு! அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு!!


பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி .பன்னீர்செல்வம், .தி.மு.. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். இதனால் ஈபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பரபரப்பு! அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு!!

அந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், சி.ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன் ஆகியோர் ஆஜராகினர்.

பரபரப்பு! அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு!!

வைரமுத்து தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 25ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர். இதனால், .பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like