Excitel-ன் அடேங்கப்பா ஆபர்..! 3 மாதத்திற்கு இலவச சேவை..!
வேகமாக வளர்ந்து வரும் இண்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடர் ஆன எக்ஸைடெல் பிராட்பேண்ட் ஆனது தனது 9 மாத திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3 மாத கால சேவை முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.மேலும் இந்த சலுகை எக்ஸைடெல் நிறுவனத்தின் 300 எம்பிபிஎஸ் திட்டத்திற்கு (300 Mbps Plan) மட்டுமே பொருந்தும்.
எக்ஸைடெல் நிறுவனம் அறிவித்துள்ள எண்ட் ஆப் சீசன் விற்பனையின் கீழ் 3 மாத கால இலவச சேவையை பெற விரும்பும் பயனர்கள், 300 எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீட்டை வழங்கும் பிராட்பேண்ட் கனெக்ஷனை பெற வேண்டும். இந்த திட்டத்தின் விலை மாதம் ரூ.499 ஆகும். இந்த திட்டத்தின் கீழ் 18 ஓடிடி இயங்குதளங்களான இலவச அணுகல்கள் மற்றும் 150 லைவ் டிவி சேனல்கள் கிடைக்கும்.
இதன்கீழ் கிடைக்கும் ஓடிடி தளங்களில் அமேசான் ப்ரைம் (Amazon Prime), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனி லைவ் (SonyLIV), ஆல்ட் பாலாஜி (ALTBalaji) ஆகியவைகளும் அடக்கம். எக்ஸைடெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையானது இந்தியாவில் 50 க்கும் மேற்பட்ட நகரங்களில் அணுக கிடைக்கிறது.