1. Home
  2. தமிழ்நாடு

போலீசாருக்காக அல்லாமல்.. இளைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்..!

போலீசாருக்காக அல்லாமல்.. இளைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்..!


சாலை விபத்துகளில் காயமடைந்தோருக்கு 48 மணி நேரம் செலவின்றி சிகிச்சை அளிக்கும் ‘நம்மை காக்கும் 48’ என்ற 'இன்னுயிர் காப்போம்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். மொத்தம் 610 மருத்துவமனைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

திட்டத்தை துவக்கி வைத்த பின்னர் ஸ்டாலின் பேசியதாவது: “இந்தியாவில், சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிப்பது வருத்தத்தை அளிக்கிறது. சாலை விபத்துகளில் பெரும்பாலும் இளம் வயதினர் உயிரிழக்கின்றனர்.

விபத்து காரணமாக எந்த உயிரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக உள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் முதல் 48 மணி நேரத்திற்கு கட்டணமின்றி சிகிச்சை பெற முடியும். 48 மணி நேரத்தோடு சிகிச்சை முடிந்து விடாது. முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சையை தொடர முடியும். வெளிமாநிலம் மற்றும் வெளி நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்த திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறலாம்.

உயிர் காக்க அனைவரும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிய வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு விலை உயர்ந்த வாகனங்களை வாங்கிக் கொடுக்கின்றனர். அதனால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அனைவரும் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் அதில்தான் தனிமனித ஒழுக்கம், சமூக பண்பாடு இருக்கிறது.

சாலை விதிகளை போலீசாருக்காக கடைப்பிடிக்காமல், தனிமனித ஒழுக்கத்திற்காக கடைப்பிடிக்க வேண்டும். சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும்போது கண்டிப்பாக வேகமாக பயணம் செய்யக்கூடாது. சாலைகளில் வேகமாக செல்வதை விட உழைப்பில் வேகத்தை காட்ட வேண்டும்” என ஸ்டாலின் பேசினார்.

Trending News

Latest News

You May Like