1. Home
  2. தமிழ்நாடு

ஆளுநரை நியமித்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும் - சீமான்..!

1

மூன்று ஆண்டுகள் நிறைவுபெறும் தருவாயில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்த ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. இதனையடுத்து, ஆர்.என்.ரவி மாற்றப்படுவாரா, பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா அல்லது வேறு மாநிலத்திற்கு ஆளுநராக மாற்றப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்தன. அண்மையில் நடந்த ஆளுநர்கள் மாற்றம், புதிய ஆளுநர்கள் நியமனத்திலும் தமிழகத்திற்கான ஆளுநர் தொடர்பான அறிவிப்பு இல்லை.


இந்த சூழலில் ஆளுநரின் பதவி நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு, “நான் ஜனாதிபதியும் இல்லை, பிரதமரும் இல்லை” என்று பதில் அளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆளுநரின் பதவி நீட்டிப்பு தொடர்பாக இன்னும் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவும் இல்லை. 2026 வரை ஆர்.என்.ரவி ஆளுநராக நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஆளுநரை நியமித்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களின் விருப்பப்படி இயங்கினால் ஆளுநரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை அல்லவா? ஆகவே, வேறு ஒருவரை போடுவதற்கு பதில், மத்திய அரசின் விருப்பப்படி இயங்குவதால் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம் என்றே கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை ஓடோடி வந்து பார்த்து ஆறுதல் சொல்வது எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், தூத்துக்குடியில் பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் போது ஒன்றுமே செய்யவில்லையே? யாரும் எங்களை வைத்து பார்க்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

Trending News

Latest News

You May Like