1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் முப்படையினர் கொடிநாளுக்கு நிதியளிக்க முன்வர வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி..!

1

தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் முப்படையினர் கொடிநாளுக்குத் தாராளமாக நிதியளிக்க முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் தேதி முப்படையினர் கொடி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நமது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் உறுதியான தூண்களாக உள்ள முப்படையினரின், தளர்வில்லாத துணிச்சல், தியாகம், தேசபக்தி ஆகியவற்றிற்கு நாம் பாராட்டுக்களை செலுத்துகிறோம். 1949 ஆம் ஆண்டு முதல், நாட்டின் சேவையில் இன்னுயிரை அர்ப்பணித்தவர்கள் இந்நாளில் கௌரவப்படுத்தப்படுகிறார்கள்.

இந்நாளில் நெஞ்சுரம்மிக்க படைவீரர்களை நினைவுகூர வேண்டும். அவர்கள் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறார்கள். பிரிவுத்துயரத்தை நயத்தோடும், மிக்க பொறுமையோடும் சகித்துக் கொள்கிறார்கள். நமது தேசத்தின் சேவையில் அவர்களுடைய தியாகங்கள் சற்றும் குறைந்ததல்ல. சீருடைப் படைவீரர்களின் நலனுக்கு உச்சபட்ச முதன்மையை இந்திய அரசு அளிக்கிறது. ராணுவத்தினரோடு பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் முக்கியமான பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள்.

முன்னாள் படையினரின் நலன்களை முன்னிட்டு, அரசுப் பணியிடங்கள், கல்வி நிறுவனங்களிலும் ஒதுக்கீடு மற்றும் உயிர் தியாகம் செய்த படையினரின் உறவினருக்கு பரிவுத்தொகை அளிப்பு, பயணச் சலுகைகள், எரிவாயு மற்றும் எரிபொருள் ஏஜென்சிக்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை, பிரதம மந்திரி கல்வி ஊக்கத்தொகைத் திட்டம், பாதுகாப்பு அமைச்சர் முன்னாள் படையினர் நலவாரிய நிதி, புனரமைப்புப் பயிற்சி, படையினர் ஓய்வு இல்லங்கள் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

முப்படையினர் கொடிநாள் நிதிக்குப் பொதுமக்கள் பங்களிப்பு அளிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தீவிரமான விழிப்புணர்வு இயக்கங்களை சமூக ஊடகங்களில் பாதுகாப்பு அமைச்சகம் ஊக்கப்படுத்தி வருகிறது. மேலும், தனிநபர்களும், நிறுவனங்களும் கொடையளிக்க வசதியாக இணையவழி கொடையளிப்பு முறைகளையும் நிறுவியுள்ளது.

மாநில ஒருங்கிணைக்கப்பட்ட நிதியின் மேலாண் குழுவின் வருடாந்தரக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முப்படையினர் கொடி நாள் நிதியளிப்பில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறது. மாநில அரசு முன்னாள் படையினருக்கும், அவர்து குடும்பத்தினருக்கும் சலுகைகள், இட ஒதுக்கீடுகள் ஆகியவற்றை கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அளித்து வருகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், முப்படையினர் கொடிநாளுக்குத் தாராளமாக நிதியளிக்க முன்வர வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like