1. Home
  2. தமிழ்நாடு

கொலை செய்தவனுக்கு கூட 2 மாதங்களில் ஜாமீன் கொடுத்து விடுவார்கள்... ஆனால் செந்தில் பாலாஜிக்கு...

1

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரியலூரில் திமுக பிரச்சாரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் சிவசங்கர் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

இந்தியை திணித்த போது எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொணடன. ஆனால் தமிழ்நாடு மட்டும் தான் எதிர்ப்பு தெரிவித்தது. அப்படி எதிர்த்ததால் தான் நாம் இன்றைக்கு தமிழில் பேசிக் கொண்டிருக்கிறோம். மகாராஷ்டிராவின் சொந்த மொழி மராத்தி. ஆனால், அங்கே மராத்தியை மறந்தே விட்டார்கள். இந்திதான் பேசப்படுகிறது. இப்படி பிகார், குஜராத் என ஒவ்வொரு மாநிலமாக நாம் உதாரணம் காட்ட முடியும்.

ஆனால், பாஜகவோட பாச்சா தமிழ்நாட்டில் பலிக்காது. பாஜகவோ அடுத்த திட்டம் என்ன தெரியுமா? இந்தியாவில் அசைவம் சாப்பிடுபவர்களே இருக்கக்கூடாது என்பதுதான். 

எனவேதான், நம்மை மிரட்டி பார்ப்பதற்காக தமிழக அமைச்சரவையில் இருந்த செந்தில் பாலாஜி மீது கை வைத்தார்கள். அவரை சிறையில் அடைத்தார்கள். 8 மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. கொலை செய்தவனுக்கு கூட 2 மாதங்களில் ஜாமீன் கொடுத்து விடுவார்கள்.

ஆனால் அடிப்படை ஆதாரம் இல்லாத வழக்கிலே கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. எனவே வரும் தேர்தலில் நாம் பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்" என அமைச்சர் சிவசங்கர் பேசினார்.

Trending News

Latest News

You May Like