சீமானுக்கு கூட வாழ்ந்த பொண்டாட்டியுடைய தாய்மொழியே தெரியாது! இதுல என்னோடது எங்க? : விஜயலட்சுமி!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னுடன் குடும்பம் நடத்தி வாழ்க்கையை சீரழித்துவிட்டதாக நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த புகார் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திடீரென வழக்கை பெற்றுக் கொண்டு விஜயலட்சுமி, பெங்களூருக்கே சென்றுவிட்டார். ஆனாலும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து சீமானை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்றது முதல் விஜய்யை, சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய்யின் கொள்கையையும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் தமிழ் தேசியம் குறித்து சீமான் தனது கருத்துகளை முன் வைத்திருந்தார். மேலும் விஜயலட்சுமி தமிழர் இல்லை என்றும் அவர் கன்னடர் என்றும் நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் தன்னை மீண்டும் கன்னடர் என்றே நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்து வந்ததை அடுத்து விஜயலட்சுமி மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-
எனக்கு தாய்மொழி வந்து தமிழே கிடையாதுன்னு சீமானும் நாம் தமிழர் கட்சியும் நிறைய இடத்தில் தவறாக சொல்லியிருப்பாங்க. இன்றைக்கு அந்த விஷயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்னு நினைச்சேன். பெங்களூருவில் நான் படிச்ச க்ளூனி கான்வென்ட் ஹைஸ்கூலில் வாங்கிய சர்டிஃபிகேட்டை தமிழ் ஊடகங்களுக்கு நான் ஷேர் பண்ணியிருக்கேன். அதில் ரொம்பத் தெளிவாகப் போட்டுருக்காங்க. விஜயலட்சுமி, தகப்பனார் பெயர் சுந்தரம், மதம் – இந்து, தாய்மொழி – தமிழ் அப்படின்னு தெளிவாக இந்த சர்டிபிகேட்டில் போட்டுருக்காங்க. இன்றைக்குப் போடல, 1986ஆம் ஆண்டிலேயே போட்டிருக்காங்க. அந்த சர்டிஃபிகேட்டுடைய காப்பி, மீடியா எல்லாத்துக்கும் கொடுத்திருக்கேன். மீடியா இந்த ஆதாரங்களை வெளியிடுங்கள்.
சீமானுக்குக் கூட வாழ்ந்த பொண்டாட்டியுடைய சாதி, மொழியே என்னான்னு தெரியாது. அதனால், அவரும் குழப்பிக்கிட்டு மக்களையும் குழப்பிட்டு இருப்பார் இல்லையா. அதனால், இந்த வீடியோவை வெளியிட்டு நான் என்னைப் பற்றிய விஷயங்களை தெளிவுபடுத்துகிறேன். அதனால், சீமானும் நான் தமிழ்ப்பொண்ணு தான் தெரிஞ்சுகிறட்டும். தமிழ்நாட்டு மக்களும் விஜயலட்சுமி தமிழ்ப்பொண்ணு தான் தெரிஞ்சுக்கட்டும். ஓ.கே.யா. வணக்கம். இவ்வாறு அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.