1. Home
  2. தமிழ்நாடு

100 கட்சியுடன் சேர்ந்தாலும் உங்களால் திமுகவை வீழ்த்த முடியாது - எடப்பாடி பழனிசாமிக்கு செந்தில் பாலாஜி சவால்..!

1

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மணப்பாறை அருகே வையம்பட்டியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் இருக்கும் குழந்தைகள் நல்ல கல்வி பெற்றால் தான் நல்ல வேலைக்கு போக முடியும்.


அதனால் அவர்களுடைய குடும்பமும், அந்த பகுதியும் முன்னேறும். இந்த நோக்கத்தோடு மற்ற மாநிலங்களை விட பள்ளிக் கல்வித்துறைக்கு ஒரு வருடத்தில் 46 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை முதலமைச்சர் ஒதுக்கி இருக்கிறார்கள். இதன்மூலம் இந்தியாவிலேயே பள்ளிக் கல்வித்துறையில் முதலிடம் பெறும் இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம்


ஒரு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த அறிவிப்போடு நிறுத்த மாட்டார். தொடர்ந்து அதை கண்காணித்து அடுத்த நிலைகளுக்கு அது அரசாணை வெளியிடப்பட்டதா, அதற்கான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறதா, அந்த திட்டங்கள் எப்போது செயல்படுத்தப்படுகிறது. அடித்தட்டு மக்கள் வரை அந்த திட்டங்கள் சென்று சேர்ந்ததா என்பதை கண்காணிப்பார்.


சில நாட்களுக்கு முன்பு ஒருவர் டெல்லி சென்று வந்தார். காலையில் ஒரு பேட்டி கொடுத்தார். இரவில் விமான நிலையத்தில் ஒரு பேட்டி கொடுத்தார். அடுத்த நாள் காலையில் ஒரு பேட்டி கொடுத்தார். முதலில் கட்டிடத்தை பார்க்க வந்தேன். ஆபிஸை பார்க்க வந்தேன் என்றார்.


பின்னர் மாநிலத்தின் தேவைகளை சொல்வதற்காக வந்தேன் என்றார். நீங்க ஒரு கட்சியுடன் கூட்டணி மட்டுமல்ல. 100 கட்சியுடன் சேர்ந்தாலும் திமுகவை வீழ்த்துவதற்கு உங்களால் ஒருபோதும் முடியாது. தமிழகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான தாய்மார்களின் அன்பையும் ஆதரவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார்.

குடும்பத்தில் ஒருவராக இருந்து கொண்டு பெண்களுக்கு பல திட்டங்களை வழங்கி வருகிறார். முதலமைச்சரின் சாதனை திட்டத்தின் பயன்களை பெறும் மணப்பாறை தொகுதி மக்கள், வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டுக் கொண்டார்.


 

Trending News

Latest News

You May Like