ரூ.10,000 கோடி கொடுத்தாலும் அதுக்கு ’நோ’ தான் - அன்பில் மகேஷ்..!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியதாவது பாஜகவினரை பொறுத்தவரை எப்படியாவது முயற்சித்து ஒரு திருக்குறளை ஆவது சொல்லி விடுகிறது. அப்படி திருக்குறள் சொல்வதை பார்த்து ஒருபுறம் ரசித்து கொண்டிருக்கையில், மறுபுறம் நிதி எதற்கு ஒதுக்கிறார்கள் என்று பார்த்தால் சமஸ்கிருதத்திற்கு தான் 1,488 கோடி ரூபாய் அளவிற்கு ஒதுக்கி விடுகிறார்கள்.
நம்முடைய திராவிட மொழிகள் அனைத்திற்கும் மிகவும் குறைவான நிதியை தான் ஒதுக்குகிறார்கள். இதைத் தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். எங்களை பொறுத்தவரை முதலமைச்சர் சொல்வது போலத் தான். நாங்கள் பிடிவாதம் பிடிக்கவில்லை. தெளிவாக இருக்கிறோம். எங்களுக்கு இரு மொழிகள் மட்டுமே போதுமானதாக உள்ளது. அதை வைத்தே பல்வேறு சாதனைகளை எங்களுடைய பிள்ளைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதுவே எங்களுக்கு போதுமானதாக இருக்கிறது. முடிந்தவரை எங்களை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள். எங்களை போலவே மற்ற மாநிலங்களும் செயல்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுங்கள். நேற்று கூட லண்டனை சேர்ந்த கிங்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறுகையில், நாங்கள் ஆய்வு செய்தவரை நாட்டிலேயே தமிழ்நாட்டு மாடல் சிறந்ததாக இருக்கிறது. இதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று கூறுபவர் வெளிநாட்டை சேர்ந்த பேராசிரியர்.
ஒன்றிய அரசை சேர்ந்தவர்களே நம்மை எப்படி பாராட்டுகிறார்கள்? ஆமாம், எல்லா விதத்திலும் நீங்கள் தான் நம்பர் ஒன் ஆக இருக்கிறீர்கள். தரமான கல்வியை கொடுப்பது, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, ஊட்டச்சத்து பற்றாக்குறையை சரிசெய்வது, பொருளாதாரம் என அனைத்திலும் முன்னணியில் இருக்கிறோம்.
இவ்வாறு எல்லா விதத்திலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழும் போது, ஒன்றிய அரசு மட்டும் மொழியை திணித்து அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம் அடையாத வகையில் என்னென்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்து செயல்பட்டு வருகிறார்கள். தமிழர்களை பொறுத்தவரை உணர்வுப்பூர்வமாக உயிராக இருப்பது மொழி தான்.
அந்த மொழியில் கைவைக்க வேண்டும் என்ற வேலையை தான் மறைமுகமாக செய்து வருகிறார்கள். அதற்கு எந்த வகையிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளிக்க மாட்டார்கள். இந்த 2,000 கோடி ரூபாய்க்கு தற்போது நான் ஒத்துக் கொண்டால் என்னுடைய தமிழினத்தை 2,000 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்து செல்வதற்கு சமம்.
அந்த பாவ காரியத்தை செய்ய மாட்டேன். 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும் செய்ய மாட்டேன். கொள்கையை விட்டு நிதியை பெற வேண்டிய அவசியம் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
“தமிழ் உமது முரசாகட்டும்!
— Anbil Mahesh (@Anbil_Mahesh) March 7, 2025
பண்பாடு உமது கவசம் ஆகட்டும்!
அறிவு உமது படைக்கலன் ஆகட்டும்!
அறநெறி உமது வாழ்க்கைத் துணையாகட்டும்!” என்று இளையோரை நோக்கி உரக்கச் சொன்ன பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மண்ணில் "சென்னை இலக்கியத் திருவிழா"வை இன்று தொடங்கி வைத்தோம்.
இதையொட்டி… pic.twitter.com/jAoZhMksj3